முக்கிய செய்திகள்

மாத வாடகை -11; ஆண்டு கட்டணம்-219;

By Unknown - Thursday, February 18, 2016 No Comments

புதுடில்லி: மாத வாடகை - 11; ஆண்டு கட்டணம் ரூ.219, இதை இரண்டு தவணைகளில் கட்டலாம். இது எங்கு தெரியுமா? இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியும் சில மாணவர்கள் போராட்டம் நடத்தும் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையில் தான்.

பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குரு நினைவு தினம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., வளாகத்தில். ,அனுசரிக்கப்பட்டது..அப்போது மாணவர்கள் சிலர்இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலை விடுதியில், மாணவர்களுக்கான மாத வாடகை ரூ.11 எனவும், ஆண்டுக்கட்டணம் ரூ.219 எனவும், இதை வருடத்தில் இரண்டு தவணைகளாக கட்டிக்கொள்ளலாம் என சலுகை வழங்கப்பட்டுள்ளது. விடுதியில் உணவுக்கட்டணம், அங்கு சில பணி செய்வதன் மூலம் சரிசெய்யப்படும். அங்குள்ள விடுதி, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவே பயன்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
கடந்த 1990களில் 11 விடுதியிருந்த நிலையில், தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த பல்கலையில், 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் உள்ளார். ஒவ்வொரு மாணவனுக்கும் அரசு ரூ. 3 லட்சம் செலவு செய்கிறது. இவ்வாறு இந்திய மக்களின் வரிப்பணத்தை அனுபவித்துக்கொண்டு, தாய் நாட்டிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு மக்கள் வரிப்பணத்தில், அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு சில மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிக்கொண்டு செயல்படுவது சரிதானா? நியாயமா?

Tags:

No Comment to " மாத வாடகை -11; ஆண்டு கட்டணம்-219; "