முக்கிய செய்திகள்

ஆண்டுக்கு 12 செய்கைக்கோள்கள்: இஸ்ரோ இலக்கு

By Unknown - Thursday, February 18, 2016 No Comments


மும்பையில் இஸ்ரோ செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை செலுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 55 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்ட நிலையில், ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்கள் அனுப்புவதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தவுள்ளது. முன்னதாக நடப்பு ஆண்டில் 2 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம் மேலும் 2 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு : வாஷிங்டனில் அடுத்த மாதம் செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள இஸ்ரோ அமைப்புக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை நாசா விஞ்ஞானி ஜேக்கப் வேன் ஜைல் தெரிவித்துள்ளார். மேலும் இத்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கு எதிர்காலத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:

No Comment to " ஆண்டுக்கு 12 செய்கைக்கோள்கள்: இஸ்ரோ இலக்கு "