முக்கிய செய்திகள்



கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.  தமிழகம் முழுவதும் 244 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 566 தேர்வுக்கூடங்களில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையத்தளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான விண்ணப்ப எண்- பயனாளர் குறியீட்டினை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc000gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Tags:

No Comment to " வி.ஏ.ஓ. தேர்வு: நுழைவுச் சீட்டுகள் தயார்: இணையதளத்தில் பதிவிறக்கலாம் "