முக்கிய செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் அடித்து நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கிறிட்சர்ச்சில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 பந்துகளில் சதம் விளாசி நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


79 பந்துகளில் 21 பவுண்டரிகள் அடங்களாக 6 சிக்ஸர்கள் விளாசி 145 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார் மெக்கல்லம். 56 பந்துகளில் விவியன் ரிச்சர்ஸ்ட்,மிஸ்பா உல் ஹக் சதம் அடித்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது இதை முறியடித்துள்ளார் மெக்கல்லம்.
கிறிட்சர்ச்சில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியுடன் மெக்கல்லம் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

No Comment to " டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் அடித்து நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் புதிய உலக சாதனை "