முக்கிய செய்திகள்


மலையாளத்தில்  மம்மூட்டி, நயன்தாரா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்' வயதான தாதாவை பற்றிய கதை.கடந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சித்திக் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் காவலன், பிரண்ட்ஸ் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்தார். அவருக்கு அந்த படத்தின் கதை பிடித்து போனது. அதை தமிழில் ரீமேக் செய்து மம்முட்டி கேரக்டரில் நடிக்க விரும்பினார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை  'தென்காசி பட்டணம்' படத்தை தயாரித்த  எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கியிருக்கிறார். தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்கவிருக்கிறார், அஜித் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் மலையாள நாளிதழ் ஒன்றுக்கு 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் சித்திக். அதில், "ரஜினி மற்றும் அஜித் இருவரும் ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தைப் பார்த்த ரஜினி சார், மம்மூட்டி பாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். தயாரிப்பாளரும் முடிவாகிவிட்டது. ரஜினி நடிப்பது உறுதி.

தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய படங்களில் நடித்து வரும் ரஜினி, அடுத்தாண்டு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க தேதிகள் ஒதுக்குவார்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சித்திக்

Tags:

No Comment to " மம்மூட்டியின் 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ரஜினிகாந்த் உறுதி செய்த இயக்குனர் "