முக்கிய செய்திகள்


நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரஜினி, கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகம் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்தார்.
விக்னேஷ், தேவிகா, சந்திரிகா நடித்திருக்கும் 'அவன் அவள்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. நடிகர் சங்க நிர்வாகிகளாக விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அப்படத்தின் இசையை வெளியிட்டார்கள்.
இசை வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து நடிகர் சங்க செயலாளர் விஷால் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியது, "நடிகர் சங்கத்திடம் 48 லட்சம் இருந்தது, 2 கோடி கடன் வாங்கி மொத்தம் 2 கோடி 48 லட்சம் செலுத்தி நிலத்தை மீட்டிருக்கிறோம். தற்போது அதில் கட்டிடம் கட்ட முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
கட்டிடம் கட்ட முதற்கட்ட நிதிக்கு ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் ரஜினி, கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகம் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் குழுக்கள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
பழைய கணக்கு வழக்குகள் இன்னும் சரிவர ஒப்படைக்கப் படாததால் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். நடிகர்களாக ஒற்றுமையாக இருப்போம். ஆனால், நடிகர் சங்கம் என்று வரும் போது கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.
நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அவ்விழாவிற்கு முதல்வரை அழைக்க அனுமதி கோரியிருக்கிறோம். அவர் அனுமதியளித்த உடன் நேரில் சென்று அழைப்பு விடுப்போம்" என்று தெரிவித்தார்

Tags:

No Comment to " நட்சத்திர கிரிக்கெட்: ரஜினி, கமல் பங்கேற்பதாக விஷால் தகவல் "