முக்கிய செய்திகள்

தனுஷின் தொடரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

By Unknown - Sunday, May 22, 2016 No Comments

தனுஷ் ‘தங்க மகன்’ படத்திற்கு பிறகு ‘கொடி’, ‘தொடரி’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இவ்விரு படங்களும் தற்போது முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதில் ‘தொடரி’ படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையில் உருவாகியுள்ள பாடல்களை ஜூன் 6ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பிரபு சாலமன், இமான் கூட்டணியில் உருவான ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. அதுபோல் இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

No Comment to " தனுஷின் தொடரி ரிலீஸ் தேதி அறிவிப்பு "