முக்கிய செய்திகள்

தமன்னா வேடத்தில் ஸ்ருதி ஹாசன்

By Unknown - Sunday, May 22, 2016 No Comments
தமன்னா, ஸ்ருதிஹாசன் இடையே போட்டி நிலவுகிறது. ஏற்கனவே ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்த ‘தோழா’ படத்தில் திடீரென்று நடிக்க மறுத்து வெளியேறினார். இதையடுத்து தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படம் ஹிட்டான பிறகு படத்தை நழுவவிட்டதற்காக வருத்தப்பட்டார் ஸ்ருதி. தமிழில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்த படம் ‘வீரம்’. இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கவுள்ள இப்படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான ஹீரோயின் தேர்வாகாமலிருந்த நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘சர்தார் கப்பர் சிங்’ எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

 எனவே தமிழில் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் நடிக்க பவன் எண்ணி இருந்தார். அதன்படியே ‘வீரம்’ படத்தை அவர் தேர்வு செய்திருக்கிறார். ஏற்கனவே கப்பர் சிங் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்திருந்த நிலையில் மீண்டும் அவரே புதிய படத்திலும் ஜோடியாக நடிக்க உள்ளார். இதில் படுகவர்ச்சி உடைகள் அணிந்து அவர் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். முதலில் வேதாளம் ரீமேக்கில்தான் பவன் கல்யாண் நடிப்பதாக இருந்தார். ‘வீரம்’ ரீமேக்கை முடித்துவிட்டு, அவர் ‘வேதாளம்’ ரீமேக்கில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Tags:

No Comment to " தமன்னா வேடத்தில் ஸ்ருதி ஹாசன் "