முக்கிய செய்திகள்

அனுஷ்காவின் கடைசி படம் ?

By Unknown - Sunday, May 22, 2016 No Comments

தமிழில் அனுஷ்கா டாப் ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் அதிக பட்சமாக தெலுங்கில்தான் நடித்தார். தற்போது தமிழில் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ம் பாகத்தில் நடித்து வருகிறார். தவிர ‘பாகுபலி 2’, ‘பாகமதி’ என இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கிறார். சிரஞ்சீவி நடிக்கும் 150 வது படத்திலும் அவரை நடிக்கவைக்க பேச்சு நடக்கிறது. தவிர தமிழில் அஜீத், லாரன்ஸ் படங்களில் நடிக்கவும் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் சிரஞ்சீவி படத்தில் நடிக்க கிரீன் சிக்னல் காட்டுவார் என்று தெரிகிறது. அத்துடன் அதையே தனது கடைசி படமாகவும் முடித்துக்கொள்ள எண்ணி உள்ளதாக அவரது தரப்பு வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. கடந்த 2 ஆண்டாகவே குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்ததால் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு அனுஷ்கா பிடி கொடுக்க வில்லை. இதற்கிடையில் பிரபாஸுடன் காதல் என்ற பேச்சும் எழுந்தது. அதற்கும் ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது மீண்டும் குடும்பத்தினர் அனுஷ்காவுக்கு திருமணம் செய்து வைக்க வற்புறுத்துவதால் அதற்கு ஓ.கே சொல்லி இருக்கிறாராம். இதையடுத்தே அவர் நடிப்புக்கு முழுக்குபோட உள்ளதாக ேகாலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

Tags:

No Comment to " அனுஷ்காவின் கடைசி படம் ? "