முக்கிய செய்திகள்


ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்த ‘எந்திரன்’ படம் 2010 அக்டோபரில் வெளியாகி வசூலை அள்ளியது. ஷங்கர் டைரக்டு செய்து இருந்தார். இந்த படத்தின் 2ம் பாகம் பூஜை போடபட்டு அதன் படி படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
.ரஜினிகாந்த், 'எந்திரன்-2' படத்தில் இளமையான தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். இந்த படம், 'எந்திரன்' படத்தின் தொடர்ச்சி என்பதால் இதிலும் அவர், 'வசீகரன்' என்ற இளம் விஞ்ஞானி வேடத்தில் வருகிறார். இதற்காக, 'ஹாலிவுட்' ஒப்பனை கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், வசனம் மற்றும் பாடல்களுக்கு மதன் கார்க்கி, ஒளிப்பதிவுக்கு நீரவ் ஷா, விஷுவல் எபெக்ட்ஸுக்கு ஸ்ரீநிவாஸ் மோகன் மற்றும் கலைக்கு முத்துராஜ் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


படத்தில், வில்லன் வேடத்தில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் வருகிறார். அடுத்த வருடம் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கிறார்.எந்திரன்-2 வில ரஜினாக்ந்துடன் நடித்தது குறித்து தனது அனுபவத்தை எமிஜாக்சன் வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த் முழுமையான பண்புள்ள மனிதர்.  அவர் மிகவும் நேர்மையானர். படப்பிடிப்பு தொடங்கிய போது எனக்கு அவர் முன் நடிக்க பதட்டமாக இருந்தது.ஆனால் அவர் உண்மையான மனிதர்.அவர் படப்பிடிப்பி தளத்தில் அனைவருக்கும் ஹலோ சொல்கிறார்.அவர் மிகவும் எளிமையாக நடந்து கொள்கிறார்.எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.  

எந்திரன் 2  படபிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. நான் ரஜினிசாருடன்  நடித்தகாட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது.அவருடன் ஒன்றாக நடிக்கும் காட்சிகள் அதிகம் உள்ளன. அவருடன் நடிப்பதில் மிக பெருமைபடுகிறேன்.அவருக்கு நான் மரியாதையளிக்கிறேன்என்று கூறினார்

Tags:

No Comment to " ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர் நடிகை எமிஜாக்சன் புகழாரம் "