முக்கிய செய்திகள்


டில்லி.: சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' ஜம்மு நகரம், பாகிஸ்தானில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' ஒருவர், செய்தியை அனுப்பும்போது, தான் இருக்கும் இடத்தின் பெயரை குறிப்பிட முடியும். அவ்வாறு செய்யும்போது, ஊரின் பெயரின் முதல் எழுத்தை அடித்தவுடன், அந்த எழுத்தில் துவங்கும் ஊர்களின் பெயர்கள் வரும். அதில் இருந்து, நமது ஊரை தேர்வு செய்யலாம்.

அந்த வகையில் நேற்று, டுவிட்டரில் சிலர், ஜம்மு என்ற பெயரை அடித்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ஜம்முவை, பாகிஸ்தானின் ஒரு பகுதி என டுவிட்டர் காட்டியது. ஜம்மு - காஷ்மீரை, சீனாவின் பகுதியாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாகிஸ்தான் நாட்டின் ஆசாத் காஷ்மீர் மாகாணம் என்றும் காட்டியது.

இந்தியாவில், 2.2 கோடி பேருக்கும் மேற்பட்டோர், டுவிட்டர் கணக்கு வைத்துள்ளனர். டுவிட்டரின் இந்த சொதப்பல், டுவிட்டர் பயன்படுத்துவோரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப பிரச்னையால் இந்த கோளாறு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் டுவிட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, தனது அதிருப்தியை, இந்திய வெளியுறவுத் துறை, டுவிட்டர் நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.

Tags:

No Comment to " டுவிட்டரின் சொதப்பல் இந்தியர்கள் கொந்தளிப்பு "