முக்கிய செய்திகள்

மம்மூட்டி திடீர் உடலநலக்குறைவு

By Indian Mails - Thursday, February 18, 2016 No Comments

மும்பையிலுள்ள கேரள சங்கத்தின் சார்பில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாயிலிருந்து மும்பைக்குத் வந்தார் மலையாள நடிகர் மம்மூட்டி. அப்போது அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ரத்தம் அழுத்தம் அதிகமானதால் உடனே அவருக்கு மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர் சனிக்கிழமையன்று பெங்களூரில் உள்ள மதர்வுட் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். எனவே உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் மும்பை விழாவில் கலந்துகொள்ளவில்லை.

கடந்த ஒருவாரகாலமாக தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த மம்மூட்டிக்குச் சரியான தூக்கமும் ஓய்வும் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டில் அவர் தற்போது ஓய்வு மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ள படபிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Tags:

No Comment to " மம்மூட்டி திடீர் உடலநலக்குறைவு "