முக்கிய செய்திகள்


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி செலவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முக்கியமான ரயில் நிலையமாக கருதப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே, இந்த ரயில் நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.4 கோடியை ரயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி செலவில் கழிப்பறை வசதி, எஸ்கலேட்டர்கள், நடைமேடைகள் விரிவாக்கம், சுற்றுச்சுவர்கள் அமைத்தல் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவுள்ளோம். குறிப்பாக 1 - 2, 5 6 நடைமேடைகளின் மேற்கூரைகள் விரிவாக்க பணிகள், தேவையான இடங்களில் ஐந்தரை அடிகளுக்கு சுற்றுச்சுவர்கள் எழுப்புதல், நடைமேடை 10 11-ல் புதிய கழிப்பறை வசதி, வாகனம் நிறுத்தும் இடத்தில் தார்சாலை மற்றும் சிறிய அளவில் பூங்காவும் அமைக்க முடிவு செய்துள்ளோம். தற்போது, நடைமேடை 10-11-ல் புதிய கழிப்பறை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதேபோல், மற்ற பணிகளும் படிப்படியாக நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:

No Comment to " எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடக்கம் "