முக்கிய செய்திகள்

 
துல்கர்சல்மான், பார்வதி ஆகிய இருவருக்கும் சிறந்த நடிகர்-நடிகைக்கான கேரள அரசு விருது கிடைத்துள்ளது. சிறந்த குணச்சித்ர நடிகையாக அஞ்சலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசு விருதுகள்
மலையாள பட உலகின் சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு கேரள அரசு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.
கடந்த ஆண்டுக்கான மலையாள திரைப்பட விருதுகள் கேரள அரசு சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர் விருதுக்கு துல்கர்சல்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘சார்லி’ என்ற படத்தில் நடித்தற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகைக்கான விருது, ‘என்னு நிந்தே மொய்தீன்’ என்ற படத்தில் நடித்த பார்வதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த மலையாள படமாக ‘ஒழிவு திவஸ்டே களி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த மலையாள படத்துக்கான இன்னொரு விருது, ‘அமீபா’ படத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குனருக்கான விருது ‘சார்லி’ படத்தை இயக்கிய மார்ட்டின் பிராக்காட்டுக்கு வழங்கப்படுகிறது.

அஞ்சலி
சிறந்த குணச்சித்ர நடிகராக ‘நிர்நாயகம்’ படத்தில் நடித்த பிரேம் பிரகாசும், சிறந்த குணசித்ர நடிகையாக ‘பெண்’ படத்தில் நடித்த அஞ்சலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு, ‘என்னு நிந்தே மொய்தீன்’ படத்துக்கு இசையமைத்த ரமேஷ் நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பின்னணி பாடகராக ஜெயசந்திரனும், பாடகியாக மதுஸ்ரீ நாராயணனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Tags:

No Comment to " சிறந்த நடிகர்-நடிகையாக தேர்வு துல்கர் சல்மான்-பார்வதிக்கு கேரள அரசு விருது குணச்சித்ர நடிகையாக அஞ்சலி தேர்வு "