முக்கிய செய்திகள்

 
மும்பை,
நடிகை பிரீத்தி ஜிந்தா தன்னுடைய அமெரிக்க காதலரை ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

பிரீத்தி ஜிந்தா
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘உயிரே’ படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு நிகரான மற்றொரு கதாநாயகி வேடத்தில் நடித்தவர், பிரீத்தி ஜிந்தா. இந்த படம் கடந்த 1998-ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக, இப்படத்தில் பிரீத்தி ஜிந்தாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. அவரது கன்னக்குழி அழகு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இதன் மூலம் திரையுலகில் வலுவான அடித்தளம் அமைத்த அவர், சினிமா மட்டுமின்றி பிற துறைகளிலும் ஜொலித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும், பிரீத்தி ஜிந்தா திகழ்கிறார்.

காதல் முறிவு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், தன்னுடைய தொழில் கூட்டாளியுமான நெஸ் வாடியாவுக்கும், பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர். அவர்களது காதலும் முறிந்தது.
இதைத்தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த ஜெனி குட்எனப் என்பவர் மீது 41 வயது நடிகை பிரீத்தி ஜிந்தா காதல் வயப்பட்டார். இது தொடர்பாக ஏராளமான கிசுகிசுக்கள் எழுந்த போதிலும், இந்த காதலை பிரீத்தி ஜிந்தா மறுக்கவில்லை.

திருமணம்
இந்த நிலையில், அவர் தன்னுடைய நீண்டநாள் காதலரான ஜெனி குட்எனப்பை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டார். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய தோழியும், ஆடை வடிவமைப்பாளரும் ஆன பராகான் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தகவலை பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பரும், இந்தி நடிகருமான கபிர் பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags:

No Comment to " நடிகை பிரீத்தி ஜிந்தா ரகசிய திருமணம் அமெரிக்க காதலரை மணந்தார் "